முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சிம்டாங்காரன் பாடலுக்கு வந்த விமர்சனம்!

Tags : AR Rahman, Negative Feedback, Sarkar, Simtaangaran Song, ஏ.ஆர்.ரகுமான், சிம்டாங்காரன் பாடல், Category : TAMIL NEWS,

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான சிம்டாங்காரன் வெளியானது.

இந்நிலையில் பாடல் வரிகள் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது இதற்கு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ‘என் அனுபவத்தால் மக்களின் கருத்துகளை கணித்துவிடுவேன். சில நேரத்தில் ரசிகர்கள் விமர்சனம் ஆச்சரியப்படுத்தும். இயக்குநர், கதாநாயகன், நடன இயக்குநர், தயாரிப்பாளர் கேட்டபின் தான் பாடல் வெளியாகும். அப்படி இருந்தாலும் ரசிகர்களின் விமர்சனம் சில நேரத்தில் மாறுபடும்” என்றார்.

 


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts