திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிக் பாஸ் பாலாஜி!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தாடி பாலாஜி மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்ததைத் தொடர்ந்து முதல் வேலையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது யாஷிகா, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா ஆகியோர் மட்டுமே தொடர்ந்து நீடிக்கின்றனர். இந்த நிலையில், இந்நிகழ்ச்சியிலிருந்து நேற்று தாடி பாலாஜி வெளியேற்றப்பட்டார்.

Episode 98 Highlights: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் தாடி பாலாஜி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகாவுடன் ஒன்று சேந்த தாடி பாலாஜி, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு முதல் வேலையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக, அவருக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், கருணாநிதியின் மறைவின் போது பாலாஜி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆறுதல் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?! ����#BiggBossTamil – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்… https://t.co/0Dv6OT8Zra— Vijay Television (@vijaytelevision) 1537685307000
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India https://t.co/oDxb6a6KMK— Vijay Television (@vijaytelevision) 1537674018000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *