எலிமினேஷனில் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யா போட்ட திட்டம்! இந்த வார புதிய எலிமினேஷன் லிஸ்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே பாக்கி உள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ரித்விகா நேரடியாக எலிமினேஷனில் தேர்வாகியுள்ள நிலையில், மேலும் இருவரை தேர்வு செய்து நீங்களே நாமின்டே செய்யுங்கள் என பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இன்று வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அனைவரும் ஐஸ்வர்யா தான் வெளியே போக வேண்டும் என அனைவரும் கேட்ட நிலையில் “நான் வெளியே போக மாட்டேன். பைனல் வரை போக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என ஐஸ்வர்யா கூறினார்.

அனைவரும் எதிராக பேச, ஐஷ்வர்யாவுக்கு ஆதரவாக மும்தாஜ், யாஷிகா பேசினர். இருப்பினும் யாரும் ஏற்றுக்கொள்ளாததால் ஐஷ்வர்யா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். அவருடன் மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். சென்றவாரம் தேர்வான் ரித்விகாவும் லிஸ்டில் தொடர்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*