ஓவியாவுக்கு பிடித்த பிக் பாஸ் 2 போட்டியாளர் யார்? அவரே அளித்த பதில்.

ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் எல்லா இளைஞர்களையும் தலைவி தலைவி என புலம்ப வைத்துவிட்டார் ஓவியா. அந்நிகழ்ச்சியில் இருந்து இவர் என்ன செய்தாலும் எங்கு வந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெரிதாக இருக்கிறது.
அண்மையில் கூட இலங்கை சென்ற இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. இவர் ரசிகர்களுடன் ஒருமுறை கலந்துரையாடும் போது பிக்பாஸ் 2 சீசனில் பிடித்தவர் யார் என்று கேட்டபோது நிகழ்ச்சி பார்ப்பது இல்லை என்றார்.
இப்போது திடீரென்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா என்று மட்டும் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்கிறாரா? இல்லையா மோசமான பெண் என்று கூறிகிறாரா என குழம்பி வருகின்றனர். #Aiswarya dutta— Oviyaa (@OviyaaSweetz) September 12, 2018