பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹாட்டான பெண்ணுக்கு வந்த பிரச்சனை! பொங்கி எழுந்த கணவர் செய்த அதிரடி செயல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவை நோக்கி பயணித்து வருகிறது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே ஜூலை மாதத்தில் தான் தொடங்கியது. தெலுங்கில் இதை நானி தொகுத்து வழங்கிறார். இந்நிகழ்ச்சியில் கீதா மாதுரி என்ற பாடகிக்கு மக்களிடத்திலும், போட்டியாளர்களிடத்திலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பலருக்கும் பிடித்த ஹாட்டான போட்டியாளர் என சொல்லலாம். இதில் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அவர் நடிகர் கௌசல் என்பவரை எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்தாராம்.

இதனால் அவரின் போனுக்கு ஆபாசமான மெசேஜ்களும், மிரட்டல்களும் வந்துள்ளது. அத்துடன் கீதா அண்மையில் ஆடிய நடன வீடியோ கௌசல் ஆர்மியால் கேலி கிண்டல் செய்யப்பட்டது. இதனை கண்ட அவரின் கணவர் நந்து வீடியோ மூலம் திட்டி தீர்த்துள்ளாராம். இதனால் மேலும் அவரின் வீடியோ விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்த செயலால் தற்போது அவர் வீடியோவை நீக்கியுள்ளாராம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*