முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி!

Tags : Bigg Boss, Bigg Boss 2 Tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 2, Category : BIGG BOSS,

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் விஜயலட்சுமி
ஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார் கெட்டவர் யார்? என்று வெளியான ப்ரமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 2.

கமல்ஹாசன் தொகுத்து வழங்க, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் ’பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றார்கள். பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஆரம்பமானது எவிக்‌ஷன் புராசஸ். ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கிய நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் அந்த வீட்டுக்குள் வந்தார் விஜயலட்சுமி. அடுத்தடுத்த எவிக்‌ஷனுக்குப் பிறகு, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள். தொடர்ந்து நேற்றைய எபிசோடில், (29/9/18) கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் குறைவாக வாங்கிய ஜனனி ஷோவிலிருந்து வெளியேற்றப் பட்டார்..

தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு மேல் விஜயலட்சுமியும் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த சீசனின் டைட்டில் வின்னரான ஆரவ் வந்து விஜயலட்சுமையை அழைத்துச் சென்றார். ஆக, ரித்விகா, ஐஸ்வர்யா இருவரும் ஃபைனலில் மோதுகிறார்கள் இன்று இரவு 8 மணிக்கு யார் டைட்டில் வின்னர் என்பது தெரியும்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts