முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

பாஜக அதிரடியால்! உஷாரான துணை முதலமைச்சர்! விரைவில் அமைச்சரவை மாற்றம்! தலை சுற்றி நிற்கும் முதலமைச்சர்!

Tags : Category : TAMIL NEWS,

கர்நாடக அரசியல் மீண்டும் சூடுபிடிக்கும் விதமாக பாஜக காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எப்போது முதல்வர் பதவி போகும் என்ற பயத்திலே கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆட்சியை நடத்தி வருகிறார்.   இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும்  எக்காரணம் கொண்டும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் வேளையில் ஈடுபடக்கூடாது என துணை முதல்வர் பரமேஷ்வர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மஜத தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்துள்ளார். ஆரம்பம் முதலே இரு கட்சிகள் இடையே பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு உள்ளது. இருப்பினும் ஆட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த கூட்டணிக்கு சவால் விடும் வகையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மக்களவை தேர்தலுக்காக ‘ஆபரேஷன் தாமரை’யை மீண்டும் தொடங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த ஆபரேஷனின் முதல்பணியாக காங்கிரஸ், மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள மூத்த தலைவர்களை பாஜகவுக்கு அழைத்து வரும் பணியினை தொடங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.  கடந்த இரு மாதங்களில் இரு கட்சிகளில் இருந்தும் 5 மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்ததே இந்த முயற்சிக்கு காரணம் என கூறப்படுகிறது. அடுத்தப்பணியாக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்திஎம்எல்ஏக்களையும் பாஜகவுக்கு இழுக்கும் வேலையும் நடைபெற்று வருகிறது.காங்கிரஸில் உள்ள கோஷ்டிபூசல், பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ ஆகியவற்றால் கர்நாடக அரசு தலை சுற்றி நிற்கிறது. இந்நிலையில் துணை முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஷ்வர் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பிற கோஷ்டி தலைவர்களான காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர் டி.கே.சிவகுமார், பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.அக்கூட்டத்தில் சமீப காலமாக நிலவும் கருத்து வேறுபாடு அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் அதேபோல அமைச்சரவையில் சுழற்சி முறையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார்.


Share :