பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல நகைச்சுவை நடிகரான கோவை செந்தில் இன்று காலமானார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கோவையை சேர்ந்தவர் என்பதால் அவர் கோவை செந்தில் என அழைக்கப்பட்டார். அண்மை காலமாக அவர் உடல்நலக்குறைவோடு இருந்ததாக தெரிகிறது. அவர் பல படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. தமிழின் பிரபல நடிகர்களுடன் அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். படையப்பா, வானத்தைப்போல உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.