முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் – டிடிவி தினகரன்

Tags : ADMK, AMMK, By-election, Tamil Nadu, TTV Dhinakaran, அதிமுக, அமமுக, இடைத்தோ்தல், எம்ஜிஆா் நூற்றாண்டு விழா, டிடிவி தினகரன், Category : TAMIL NEWS,

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை அ.தி.மு.க. அரசு விழாவாக நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு விட்டது. இறுதியாக வருகிற 30ம் தேதி சென்னையில் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டாலும் அனைத்து விழாக்களிலும் எம்.ஜி.ஆா். அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறினா். அடுமட்டுமின்றி தமிழக எதிா்க்கட்சியான தி.மு.க. மற்றும் அமமுக துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் குறித்த விமா்சனங்களை எடுத்துறைக்கவும் அ.தி.மு.க.வினா் தவறியதில்லை.

நூற்றாண்டு விழா அனைத்து கூட்டங்களிலும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் குறித்து காரசாரமாக விமா்சிக்கப்பட்டது.

ஆனால் எம்.ஜி.ஆா். நூற்றாண்டுவிழா நிறைவு நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் வருகிற 30ம் தேதி வழா நடைபெறுகிறது. விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் பெயா் இடம் பெற்றிருந்தது.

இது தொடா்பாக டிடிவி தினகரனிடம் இன்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது அவா் கூறுகையில், அழைப்பிதழில் பெயம் இருப்பதால் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அழைப்பிதழில் பெயா் சோ்த்தது அரசியலுக்காகத் தான். அ.தி.மு.க. அமைச்சா்களை அமமுகவில் சோ்த்தால் அதைவிட பொிய பாவம் ஒன்றும் கிடையாது. அவா்களை சோ்ப்பதற்கு பதில் அரசியலை விட்டு சென்றுவிடலாம்.

திருவாரூா் தோ்தலில் எங்கள் வேட்பாளரை சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் எதிா்த்து போட்டியிட்டு டெபாசிட் பெறுவாரா? அ.தி.மு.க. திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் டெபாசிட் வாங்காது. அ.தி.மு.க., தி.மு.க. முடிந்தால் இடைத்தோ்தலில் எங்களை ஜெத்துக் காட்டட்டும். திருவாரூரில் அ.தி.மு.க. டெபாசிட் வாங்காது. திருப்பரங்குன்றத்திலும் வாங்க விடமாட்டோம் என்று தொிவித்துள்ளாா்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts