ஜடேஜாவின் அதிரடியால் தப்பித்த இந்திய அணி! நெருங்கி வந்து ஆட்டமிழந்தது!

இங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று ஆரம்பித்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் – ஸ்டூவர்ட் பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.  இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய இன்னிங்க்சை தொடங்க ராகுல், தவான் களமிறங்கினார்கள். வழக்கம் போல வந்த வேகத்தில் தவான் சென்றுவிட்டார். பின்னர் களமிறங்கிய புஜராவுடன் ஓரளவு சிறப்பாக விளையாடிய ராகுல் 37  ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து புஜாராவும்  37  ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரகானே 0 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில்  பரிதாபமாக நின்று பார்த்த கோலியம் 49  ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷாப் பான்ட் 5   ரன்களில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் ஹனுமா விஹாரி  25 ரன்களுடனும் ரவி ஜடேஜா 8 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 174ரன்களுக்கு 6  விக்கெட்டுகள் என்ற பரிதாப நிலையில் உள்ளது. 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தினை தொடர்ந்த பிந்தைய அணிக்கு அறிமுக வீரர் ஹனுமா விஹாரி  ரவி ஜடேஜா  ஜோடி ஓரளவு நம்பிககையை அளித்தது. மிகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் விளையாடிய ஹனுமா விஹாரி உணவு இடைவேளைக்கு முன் 56 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.  பின்னர் இஷாந்த் ஷமி விரைவில் வெளியேற ஜடேஜா பும்ராவை ஒருபுறம் நிற்கவைத்து அற்புதமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இறுதி விக்கெட்டாக பும்ரா ஆட்டமிழக்க இந்திய அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *