பிக்பாஸ் கமல்ஹாசனை ஈர்த்த ஒரு குழந்தை! கூட்டத்தில் நடந்த அதிசயம்

கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் அவர் பேசும் தமிழ் பலருக்கு பிடித்துள்ளது என்பதை அதற்கான ஆதரவுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அங்கு மட்டுமல்ல சமூக வலைதளத்திலும் தான். சின்ன வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அவர் நடித்ததையும் அப்படத்தின் முக்கிய பாடலான அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் இன்றளவும் மறக்க முடியாது.

இந்நிலையில் அவர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். திரும்பும் வழியில் பலரையும் சந்தித்தார். கூட்டத்தில் ஒரு பெண் குழந்தை கூப்புட்டுக்கிட்டே இருக்கேன், கத்திக்கிட்டே இருக்கேன் உங்களுக்கு கேட்கலையா என குறும்பாக பேசியது பலரையும் ஈர்த்துள்ளது. அவரும் கார் கண்ணாடியை திறந்து அக்குழந்தையிடம் பேசி மகிழ்ந்தார். பிக்பாஸில் #கமல்ஹாசன் உச்சரிக்கும் “உங்கள்நான்” என்கிற வார்த்தையின் வீச்சு, இந்த சின்ன பெண் குழந்தை கமலை தன் “குடும்பத்தில்” ஒருவரிடம் பேசுவது போல் “உரிமையாக” பேசும் பேச்சில் தெரிகிறது 👏 பெண் குழந்தை : கூப்புட்டுக்கிட்டே இருக்கேன், கத்திக்கிட்டே இருக்கேன் ❤ pic. twitter. com/0YeJm8Crvj— SundaR KamaL (@Kamaladdict7) September 21, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *