ஓரின சேர்க்கைக்கு இடம் கொடுத்தால் தேசம் அழிந்து விடும் – மதபோதகர் கூச்சல்

கோவை: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதற்கு எதிராக கிறிஸ்துவ மத போதகர் ஜெபர்சன் கோவை நீதிமன்றத்தில் கூச்சலிட்டது வைரலாகி உள்ளது.
பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள்.ஆதரவு எதிர்ப்புஇதற்கு இந்தியா முழுக்க பலர் ஆதரவு அளித்தனர். நிறுவனங்கள் எல்லாம் தங்கள் லோகோவை இதற்காக மாற்றியது. சிலர் ஆதரவு அளித்து வருவது போலவே சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இது இயற்கைக்கு முரணானது என்று கூறுகிறார்கள்.நீதிமன்றத்தில் கூச்சல்இந்த நிலையில்தான் ராமநாதபுரத்தை சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர் ஜெபர்சன் கோவை நீதிமன்றத்தில் இதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே அவர் கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதை வீடியோ எடுத்த ஆங்கில செய்தி சேனல் (மிரர்நவ்) நிரூபர் அதை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்..(’)’.. ../—(@1)10, 2018நாடு குட்டிசுவராகி விடும்அதில் மத போதகர் ஜெபர்சன் கூறியதாவது, ஓரின சேர்க்கைக்கு இடம் கொடுத்தால் தேசம் குட்டிசுவராகி விடும். ஓரின சேர்க்கை மகா பெரிய குற்றம். ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். ஓரின சேர்க்கை இந்த சமுதாயத்தை சீரழித்துவிடும். ஓரின சேர்க்கை இந்த தேசத்தை பாழாக்கிவிடும்.அழிவுஓரின சேர்க்கைக்கு இடம் கொடுத்த பட்டணம் ஒன்றை கடவுள் அக்கினியால் அழித்தார். அந்த நகரத்தின் அழிவிற்கு ஓரின சேர்க்கைதான் காரணம். ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் செய்யும் திருமணத்திற்கு யாரும் இடம் கொடுத்து விடாதீர்கள், எல்லாரும் மனம் திருந்துகள் என்று கோரிக்கை வைத்துள்ளார். இவரின் கூச்சலால் அங்கே சில நிமிடமும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *