Copyright TAMIL NEWS. All rights reserved.

தமிழ் செய்திகள்

Tamil News | தமிழ் செய்திகள் | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News

அமைச்சா் விஜயபாஸ்கா் என்னை சந்தித்து உதவி கோரினாா் – டிடிவி தினகரன்


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் 2 மாதங்களுக்கு முன்னா் என்னை நேரில் சந்தித்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டதாக அமமுக துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

அண்ணா பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கலந்து கொண்டாா். அவா் பேசுகையில், டாக்டா்.முத்து லெட்சுமி ரெட்டி மூலம் நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்த புதுக்கோட்டை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் விஜயபாஸ்கரின் குட்கா உள்ளிட்ட முறைகேடுகளால் தற்போது சிறுமை அடைந்துள்ளது.

திருவாரூா், திருப்பரங்குன்றம் இடைத்தோ்தல் பயத்தால் அமைச்சா்கள் நிதானமின்றி பேசிவருகின்றனா். 2 தொகுதிகளிலும் அமமுக குக்கா் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி.

2 மாதங்களுக்கு முன்பு நான் சென்னையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் என்னை நேரில் சந்தித்தாா். அப்போது, வருமான வரித்துறை உள்ளிட்ட துறையினரின் சோதனைகளில் நான் தற்போது சிக்கியுள்ளேன். என்னை டெல்லி அழைத்து செல்லவும் வாய்ப்பு உள்ளது.


என்னை யாரும் காப்பாற்றுவதாக தொியவில்லை. என்னை காப்பாற்றுங்கள். எப்போதும் உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று புலம்பினாா். எனக்கு விசுவாசமாக இருந்து என்ன பயன்? கட்சிக்கே நீங்கள் விசுவாசமாக இல்லையே என்று தெரிவித்ததாக அவா் பேசினாா்.எல்லை மீறும் நந்தினி சீரியல், படுக்கையறை காட்சி வரை வந்த கொடுமை!

H Raja: ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு – tamil

Related Posts

நாங்க யாரு; எங்ககிட்டயேவா? : தஞ்சாவூர் டிடிவி ஆதரவாளர்கள்

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வைத்திருந்த ஃப்ளெக்ஸ் போர்டை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அதற்கு டி.டி.வி ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு,…


“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா?”- புகழேந்தி   | “If Senthil Balaji joins the DMK, will Stalin become the Chief Minister

இதனிடையே அமமுக சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் சமீப காலமாக அவர் பங்கேற்கவில்லை. மேலும் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு…


சசிகலா தலைமை ஏற்றால் மட்டுமே அஇஅதிமுக கட்சி உடையாமல் இருக்கும் -அனிதா குப்புசாமி

அதிமுக தலைமை கழகத்தின் பேச்சாளராக இருந்த அனிதா குப்புசாமி அரசியலில் இருந்தே சில காலம் விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து…


ஆபரேஷன் பாமக.. பாமக கூடாரத்தை காலி செய்யும் டிடிவி தினகரன்

தினகரன் ஒரு தீர்க்கமான முடிவில்தான் இருக்கிறார்.. அடுத்தடுத்து அவரது மூவ்களை கண்டு ஆட்டம் கண்டுவருகிறது அரசியல் களம்.. குறிப்பாக பாமக!…


TTV Dhinakaran BE, MLA AIADMK AMMA Chinnamma

TTVDhinakaran BE, MLA AIADMK AMMA Chinnamma
அண்மை செய்திகள்