மெரினாவில் குவியும் காவல்துறையினர்!. அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனை என தமிழகமே எதிர்பார்ப்பு!.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மகன் 2014 ஆம் ஆண்டு காட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிாி இன்று தனது ஆதரவாளா்களுடன் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அமைதி பேரணி செல்கிறாா். இதனால் சென்னை மெரினாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வா் கலைஞர் கருணாநிதி உயிருடன் இருக்கும்பொழுது மு.க.அழகிரி தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தார். பின்னா் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்துமு.க.அழகிரி நீக்கப்பட்டாா். 

கடந்த மாதம் தனது குடும்பத்தாருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற மு.க.அழகிரி தனது தந்தையிடம் எனது ஆதங்கங்களை தொிவித்துள்ளேன். கருணாநிதியின் உண்மையான ஆதரவாளா்கள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனா் என்று கூறினார். மேலும் செப்டம்பா் 5ம் தேதி தனது ஆதரவாளா்கள் 1 லட்சம் பேருடன் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இன்று காலை 10 மணிக்கு அழகிாி தலைமையில் தொடங்கும் அமைதிப் பேரணி வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. இன்று அவரது அரசியல் பயணம் பற்றி அங்கு வெளியிடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*