முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

13 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த பாக்கித்தான் ராணுவ நீதிமன்றம்..!

Tags : Category : TAMIL NEWS,

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் உண்டாக்கி வருகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள், ராணுவவீரர்கள், போலீஸ் அதிகாரிகள் என 202 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த ராணுவ சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட தீவிரவாதிகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் 7 தீவிரவாதிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா 13 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதாக ராணுவத்தின் செய்திப்பிரிவு தெரிவித்திருக்கிறது.


Share :