முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

‘பேட்ட’ படத்தில் மிசா கைதியாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Tags : Misa Prisoner, Petta, Rajini, Rajinikanth, கார்த்திக் சுப்புராஜ், பேட்ட, மிசா கைதி, ரஜினி, Category : KOLLYWOOD NEWS,

நடிகர் ரஜினியை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படம் ‘பேட்ட’. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும் படத்தில் த்ரிஷா, விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியானது. அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரன் தற்போது ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். இவர் ரஜினியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் ரஜினியின் வலது கையில் ஒரு செம்பு கம்பி உள்ளது. அதில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

1975ல் இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது அவசர சட்டத்தின்கீழ் பலர் கைதானார்கள். எனவே ரஜினியின் கையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பதால் இந்த படம் மிசா சட்டம் பிரகடனம் செய்யப்பட்டபோது நடக்கும் கதையில் உருவாகலாம் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts