பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் – ரவிச்சந்திரன் தாயார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கு கடந்த 06 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்னும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.   மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கு  உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவு செய்யலாம். 2016- ல் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு மீது அவரே முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதையடுத்து இதுகுறித்து ஆலோசனை செய்ய தமிழகத்தில் இன்று அமைச்சரவை கூட்டப்படுகிறது. இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனை விடுவிக்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி, தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து பேச தமிழக முதல்வர் நேரம் ஒதுக்கி தருமாறு  கேட்டுக்கொள்வதாகவும் ரவிச்சந்திரன் தாயார் குறிப்பிட்டு இருந்தார். 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*