முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சாமி ஸ்கொயர் திரை விமர்சனம்

Tags : Chiyaan Vikram, Keerthy Suresh, Saamy Square, Saamy Square From Today, Category : KOLLYWOOD NEWS,

சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து சாமி வேட்டையை தொடர, இந்த டிஜிட்டல் உலகில் ஏற்கனவே பல ட்ரோல், கிண்டல்களை தாண்டி சாமி-2 ஜெயித்ததா? இல்லை ட்ரோல் கண்டண்ட் ஆனதா? பார்ப்போம். கதைக்களம்சாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சை கொல்வதோடு படம் ஆரம்பிக்கின்றது.

அதை தொடர்ந்து 28 வருடங்களுக்கு பிறகு அவருடைய மகன் ராம் சாமி(விக்ரம்) டெல்லியில் ஐ ஏ எஸ் படிக்கின்றார். அந்த இடைப்பட்ட கேப்பில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சை(பாபி சிம்ஹா) திருநெல்வேலியை தன் கண்ட் ரோலுக்கு கொண்டு வருகின்றார். ஆனால் அப்பா இரத்தம் தானே மகனுக்கு ஓடுகிறது அல்லவா, அதனால் ஐ ஏ எஸ் விட்டு ஐபிஎஸ் எடுக்கின்றார்.

பிறகு என்ன திருநெல்வேலி சென்று ராம் சாமி எப்படி ராவண பிச்சையை வேட்டையாடுகின்றார் என்பதே மீதிக்கதை. படத்தை பற்றிய அலசல்விக்ரம் நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருக்கின்றார். அந்த வெற்றி சாமி-2வில் அவருக்கு கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம், அதற்கான வேலைகளை அவர் முடிந்த அளவு செய்தும் உள்ளார்.

ஆறுச்சாமி மகன் ராம் சாமி கேட்க கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் கதையோடு ஹரி எப்படியோ கோர்த்து கொண்டு வந்துவிட்டார். அதிலும் அப்பாவை போல் ஒருசாமி, இரண்டு சாமி வசனம் பேசும் போது தியேட்டரே அதிர்கின்றது. இந்த படத்திற்கு ஏன் பாபி சிம்ஹா என்று தான் இவரை கமிட் செய்யும் போது ஒரு குரல் வந்தது. ஆனால், அவரும் கலக்கியுள்ளார் தன் கதாபாத்திரத்தில். இதை தவிர சூரி, கீர்த்தி சுரேஷ் காம்போ நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது, அதிலும் சூரி காமெடி முடியல ஹரி சார்.

த்ரிஷாவிற்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஸ் என்று காட்டும் போதே ரசிகர்களிடம் வருத்தம் தான் மிஞ்சி நிற்கின்றது. படத்தின் முதல் பாதி ஹரி படம் தானா என்பது போல் நகர்கின்றது, இடைவேளையில் ராம் சாமி திருநெல்வேலிக்குள் வரும் போது படம் சூடுப்பிடிக்கின்றது. அதன் பிறகு கிளைமேக்ஸ் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லை, இடையில் கீர்த்தி, சூரியை மறந்தால். ஹரி சார் உங்களிடம் யாரோ வேகவேகமாக படம் எடுத்தால் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வருவார்கள் என்று சொல்லி ஏமாற்றியுள்ளார்கள் போல.

சிங்கம், சாமியின் மிகப்பெரும் வெற்றிக்கு துரை சிங்கம், ஆறுச்சாமியின் நிதானமும் அழுத்தமான கதையும் தான் காரணம். அந்த ரூட்டிற்கு வாங்க சார், த்ரிஷா இல்லாதது எத்தனை சோகமோ, அதேபோல் DSP-யின் இசை. சோதிக்கின்றார், குறிப்பாக பாடல்களில். ஹாரிஸ் இசை வரும் போது மட்டுமே திரையரங்கு அதிர்கின்றது. ஒளிப்பதிவு கிளைமேக்ஸில் ராஜஸ்தான் மண் நம் மீது விழுகின்றது, அத்தனை ஸ்பீட்.

க்ளாப்ஸ்விக்ரம் ஒன் மேன் ஷோ மற்றும் பாபி சிம்ஹாவின் வில்லத்தனம். படத்தின் இரண்டாம் பாதியின் பரபரப்பு. பல்ப்ஸ்படத்தின் முதல் பாதி மற்றும் சூரி காமெடி, கீர்த்தி சுரேஷ் படு செயற்கையான நடிப்பு. மொத்தத்தில் சாமியை மிஞ்சவில்லை என்றாலும், சமாளித்து கரை சேர்ந்துள்ளது இந்த சாமி-2


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts