கவர்ச்சி உடையில் சமந்தா : கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு நெத்தியடி கொடுத்த சமந்தா

சமூக வலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக அதிகம் விமர்சிக்கப்படும் நடிகையாக சமந்தா உள்ளார். அவரை விமர்சித்தவர்களுக்கு நெத்தி அடி அடித்துள்ளார்.

நடிகை சமந்தா வெளியிட்ட சில கவர்ச்சி படங்களுக்கு திருமணத்திற்கு பிறகு ஏன் இப்படி என கேட்டதற்கு கடுப்பில் பதிலளித்துள்ளார்.

சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பிடித்த சில கிளாமர் புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

கவர்ச்சி படம்:முதலில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு அவரின் சில ரசிகர்கள் ஏன் திருமணத்திற்கு பின்பு இப்படிப்பட்ட உடைகளை உடுத்துகிறீர்கள் என கேட்டிருந்தனர்.

ரசிகர்களின் கருத்தால் இனி அப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிடமாட்டார் என நினைத்திருந்த நிலையில் மறுநாளே மீண்டும் ஒரு கவர்ச்சி படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தையும் பலர் ட்ரோல் செய்தனர். அந்த இரு புகைப்படங்களுக்கும் சேர்த்து 15 லட்சம் லைக்குகள், 8 ஆயிரம் கமெண்டுகள் வந்தன.

கணவருடன் படம்:இந்நிலையில் 3வது புகைப்படமாக தன் கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் படத்தை பதிவிட்டார். இதற்கு மட்டும் 8 லட்சம் லைக்குகள், 3 ஆயிரம் கமெண்டுகள் வந்தன.

அதற்கு சிலர் கணவருடன் இருக்கும் போதும் கவர்ச்சி படமா என கேட்டனர்.

சமந்தா பதில்:இந்நிலையில் “திருமணத்திற்கு பிறகு நான் எப்படி வாழவேண்டும் என எனக்கு சொல்பவர்களுக்கு” என கூறி நடுவிரலை காண்பிப்பது போன்ற படத்தை போட்டுள்ளார்.

A Biggg Salute to u @Samanthaprabhu2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *