சீமராஜா காட்சிகள் ரத்து! தியேட்டர் சென்ற ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் நடித்த சீமராஜா படம் இன்று வெளியாகிறது. படத்துக்கு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு உள்ளதால் தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ் புல் ஆனது.

ஆனால் இன்று காலை தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் kdm பிரச்சனையால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தான். இதே பிரச்சனை நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்துக்கும் வந்தது. தற்போது அனைத்து பிரச்னையும் சரிசெய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் காலை காட்சிகள் வழக்கம் போல படம் திரையிடப்படும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளன .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*