பிக்பாஸில் மும்தாஜுக்கு மட்டும் தனி பாத்ரூம்! ஏன் இத்தனை சலுகை? முதல்சீசன் போட்டியாளர்கள் செய்த பிரச்சனை

இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ள முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். இன்று பிக்பாஸ் வீட்டில் மும்தாஜுக்கு மட்டும் கொடுக்கப்படும் தனி சலுகைகள் பற்றி அவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். மும்தாஜுக்காக வழங்கப்படும் தயிர், ஆலிவ் ஆயில் போன்ற பொருட்களை அவர்கள் எடுத்து வெளியில் அனுப்பியுள்ளனர்.

அது மட்டுமின்றி அனைத்து போட்டியாளர்களும் சமம் என்றால் ஏன் மும்தாஜுக்கு மட்டும் தனியாக பாத்ரூம் கொடுத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் உங்க்ளுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என பழமொழி கூறி சினேகன் விமர்சித்தார். எப்போதும் சொகுசாகவே இருக்க வேண்டும், ஆனால் போட்டியிலும் ஜெயிக்கவேண்டும் என நினைப்பதைத்தான் அவர் இப்படி விமர்சித்துள்ளார்.

இந்த வாரம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள். . Bigg Boss Tamil 2 Vote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *