முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

முன்னாள் அதிமுக அமைச்சரின் மகனின் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தர கணவர் மனு!

Tags : Chennai, Habeas Corpus Petition, Illegal Affair, Madurai Bench Of The Madras High Court, Tamilnadu, Category : TAMIL NEWS,

 

சென்னை வேளச்சேரியில் வசித்து வருபவர் விஜய கிருஷ்ணகுமார்(35). இவர் தனது மனைவியைக் கண்டிபிடித்து தருமாறு கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனுவில் கூறியிருந்தாவது: எனக்கும், எனது மனைவிக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு தஞ்சையில் வைத்து திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 4 வயதில் ரெட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மனைவிக்கு பிரசவத்திற்கு பிறகு மீண்டும் படிக்கும் ஆசை வந்தது. அதனால் தரமணியில் உள்ள ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா-வில் சேர்ந்து படித்து வந்தார். தற்போது மூன்றாமாண்டு படித்து வரும் எனது மனைவிக்கும், அவரது வகுப்புத் தோழனுக்கும் இடையே காதல் மலர்ந்து வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மேலும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் என்மீது பொய் வழக்கு தொடர்ந்தார். ஆனால் எனது மனைவியின் பெற்றொர்கள் இதை மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் எனது மனைவி, கடந்த இரண்டு வாரத்திற்கு முன், இரண்டு குழந்தைகளையும் தனியே விட்டு, பெற்றொரின் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். தற்போது எனது மனைவி முன்னாள் அதிமுக அமைச்சரின் மகனின் சட்டவிரோத பிடியில் இருக்கிறார். எனவே அவரிடமிருந்து எனது மனைவியை மீட்டுக் கொடுங்கள். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

மேலுல் இதுகுறித்து அவர் கூறுகையில் எனது மனைவியை கண்டுபிடித்து தரக் கோரி தஞ்சை காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தேன். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்திற்கு வந்ததாக கூறினார்.

இந்நிலையில் அந்த பெண் நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் ஆஜரானார். அவது வாக்குமூலம் கேமிராவில் பதிவு செய்யப்பட்டது.

 


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts