முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரவு தரும் விஷயத்தில், திருநாவுக்கரசரின் வேறுபட்ட கருத்து!.

Tags : Category : TAMIL NEWS,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.  பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து, தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.இதையடுத்து தமிழக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொண்டனர்.இதனையடுத்து ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரின் விடுதலை தவறான முன் உதாரணம் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பல ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.  சட்டம் எல்லோருக்கும் பொதுவானது தான், பல ஆண்டுகள் சிறை என்கிற கருணை அடிப்படையில் இந்த முடிவு எடுத்தால் அது எதிர்காலத்தில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.


Share :