அவசர அவசரமாக கூடும் தமிழக அமைச்சரவை.! அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பரபரப்பு பேட்டி.!!

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை தமிழக அரசு, தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 7 தமிழர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவு செய்யலாம் என்றும், 2016-ல் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு குறித்து அவரே முடிவெடுக்கலாம் என்றும், முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவு செய்யலாம்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.#இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட விருக்கிறது. இந்த கூட்டத்தில் 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று நடக்க இருக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக சிறை தணடனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *