தற்போது நடக்கும் டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைத்த விராட்கோலி!.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்    தனது 18,000 ரன்களை நிறைவு  செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன்  5  டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட   இந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை இழந்த நிலையில் இரு அணிகளுக்கு  இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன்  ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர் 89 ரன்களும், குக் 71 ரன்களும் எடுத்து மொத்தம்  332 ரன்கள் எடுத்து  முதல் இன்னிங்ஸில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.பின்னர் இந்திய அணிக்காக தவானும், லோகேஷராகுலும் களம் இறங்கினர். தவான் மூன்று  ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் பின் களம் இறங்கிய  கேப்டன்  விராட்கோலி நன்றாக ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து  மீட்க போராடினர்.  இருப்பினும் 49 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.      நேற்றைய  ஆட்டத்தின்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்   தனது 18,000 ரன்களை நிறைவு  செய்தார் விராட்கோலி.இது தவிர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  மிகவிரைவாக  18,000 ரன்களை கடந்த வீரர்கலின்  பட்டியலில் முதலிடத்தை பிடித்து   இந்தியாவிற்கு பெருமை      சேர்த்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *