முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இப்படியும் ஒரு ஆளா? - ஹெச்.ராஜாவை விமர்சித்த சித்தார்த்

Tags : Actor Siddharth, BJP Leader H Raja, Ganesh Chaturthi, H.Raja, Vinayagar Chaturthi, Category : TAMIL NEWS,

குறிப்பிட்ட வழியில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில், சில மோசமான வார்த்தைகளால் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. இப்படி பேசும் ராஜாவை நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை, மெய்யபுரத்தில் விநாயர் ஊர்வலம் குறிப்பிட்ட வழியில் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல் துறையினர் சொல்ல, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸாரை விமர்சித்ததோடு, உயர்நீதிமன்றத்தையும் சில மோசமான வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

சித்தார்த் விமர்சனம்:ராஜாவின் இந்த மோசமான செயலை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சுட்டுத் தள்ளும் தமிழக போலீஸார், உயர்நீதிமன்றம், போலீஸார், சிறுபான்மையினர் குறித்து ஹெச் ராஜா போன்றோரின் மிரட்டல் தொனி, மோசமான வார்த்தைகளால் பேசுவதை வேடிக்கப் பார்ப்பதாக விமர்சித்துள்ளார். இந்துத்துவம் என்ற பெயரில் செய்வது சரியா?

ஹெச்.ராஜா விளக்கம் :
இன்று வீடியோ பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ள ஹெச்.ராஜா, நான் நீதிமன்றத்தை மதிப்பவன். நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலா் பரப்புகின்றனா் என்று தொிவித்துள்ளாா்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts