முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சாமி-2 முதல் நாள் வசூல் சாதனை!!

Tags : Actor Vikram's Saamy 2, Keerthy Suresh, Saamy 2 Box Office Collection, Samanatha, Sivakarthikeyam, Vikram, சாமி ஸ்கொயர், சாமி-2, சாமி-2 வசூல், சீமராஜா வசூல், Category : TAMIL NEWS,

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 படம், முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ. 6.5 கோடி வசூலித்து இருந்தாலும் சீமராஜா சாதனையை முறியடிக்க முடியவில்லை.

நடிகர் விக்ரம் நடிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் செப்டம்பர் 21ஆம் தேதி சாமி 2 என்ற சாமி ஸ்கொயர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். தமிழகம் முழுவதும் 350 திரைகளில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இந்தப் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இருந்து படத்திற்கு வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

படம் வெளியான முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை)மட்டும் சென்னையில் சாமி 2 ரூ. 65 லட்சம் வசூல் குவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ. 6.5 கோடி குவித்துள்ளது. படத்தின் விமர்சனம் நெகடிவ் ஆக இருந்தாலும், அதையெல்லாம் கடந்து வசூலில் சாதித்து வருகிறது. உலகம் முழுவதும் ரூ. 12 கோடி ஈட்டியுள்ளது.

பி மற்றும் சி மையங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வறவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

சீமராஜாவிடம் தோற்ற சாமி 2:
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா அளவிற்கு சாமி 2 வசூலை ஈட்டவில்லை. படம் வெளியான முதல் நாள் சென்னையில் மட்டும் சீமராஜா ரூ. 97 லட்சம் வசூலித்து இருந்தது. தமிழகம் முழுவதும் ரூ. 10 கோடி வசூலித்து இருந்தது. சீமராஜாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து இருந்தார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts