முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட உபா சட்டம் ரத்து!

Tags : Chennai Egmore Court, May 17 Co Ordinator Thirumurugan Gandhi, Thirumurugan Gandhi, Uapa Case Dismmissed, Category : TAMIL NEWS,

திருமுருகன் காந்தி மீது காவல்துறை பதிவு செய்த சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தை (UAPA) எழும்பூர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கடந்த மாதம் ஐநா சபையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பதிவு செய்தார். அப்போது, அவரை கைது செய்யும் வகையில், அனைத்து விமானநிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பின்னர், சென்னை விமான நிலையம் வந்த திருமுருகன்காந்தியை போலீசார் கைது செய்தனர். மேலும், சிறையில் அடைக்க அனுமதி அளிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினர். ஆனால், அவரை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்தாண்டு அனுமதியின்றி திருமுருகன்காந்தி பேரணி சென்றதாக அவர் மீது உபா (UAPA) எனப்படும் சட்டவிரோத செயல் தடுப்பு வழக்கை போலீசார் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்து, உபா வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts