ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்!!

உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய, பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் செல்ல இருந்த பகுதியில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், அப்பகுதி போலீசார் ஊர்வலத்தைத் தடுத்தனர்.

ஹெச். ராஜாவின் சர்ச்சைகளை பாஜக வேடிக்கை பார்ப்பது ஏன்?

இதனால் கோபமடைந்த ஹெச்.ராஜா, போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அப்போது, போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும், உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளிலும் பேசினார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதையடுத்து, அவர்மீது திருமயம் காவல்நிலையத்தில் 7பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு, அவரைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே தலைமறைவான ஹெச்.ராஜா, அந்த வீடியோவில் இருப்பது தனது குரல் இல்லை எனவும், யாரோ எடிட் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

வாய்ஸ் டெஸ்ட்க்கு ரெடியா? ஹெச். ராஜாவுக்கு சவால்!

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தைப் பற்றி அவதூறாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற வாயிலின் முன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்ற பதாகைகளையும், கோஷங்களையும் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *