முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய ஆணை!

Tags : Chennai, Chennai High Court, Compulsory Helmet Law, Director General Police, Tamil Nadu Police, கட்டாய ஹெல்மெட் சட்டம், சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு போலீஸ், Category : TAMIL NEWS,

சென்னை: கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து, முக்கிய உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் மோட்டார் வாகனச் சட்டம் முறையாக அமல்படுத்தப் படுவதில்லை என்று உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த மாதம் வரை 10,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹெல்மெட் கட்டாயம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் விழிப்புணர்வு காரணமாக, வழக்குகள் பாதியாக குறைந்துள்ளன என்று கூறப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது.

கட்டாய ஹெல்மெட் சட்டம் முறையாக அமலில் இல்லை. காவல்துறையினர் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிகிறார்களா என்று கேள்வி எழுப்பி, கண்காணிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையில், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Chennai High Court orders to implement compulsory helmet law strictly.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts