முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

Seema Raja Full Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி!!

Tags : Seema Raja In Tamilrockers, Sivakarthikeyan, Tamil Movies Download, சீமராஜா, தமிழ் கன், தமிழ் ராக்கர்ஸ், Category : TAMIL NEWS,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான சீமராஜா படம்,வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரையிலகில் விரைவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது சொந்த உழைப்பு, திறமை இவரது வெற்றிக்கு காரணங்களாக உள்ளன. சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் அமைந்தன. இந்தப் படங்களை பொன்ராம் இயக்கி இருந்தார். நேற்று வெளியான சீமராஜா படத்தையும் இவரேதான் இயக்கி இருந்தார். முதல் நாள் காட்சியை காசி தியேட்டரில் தனது ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் பார்த்து ரசித்தார். தமிழகம் முழுவதும் இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் வெற்றி குவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் நாளிலேயே ரூ. 10 கோடி குவித்துள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா, வில்லி கேரக்டரில் சிம்ரன் மற்றும் சூரி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

சீமராஜா சினிமா விமர்சனம்

தமிழ் ராக்கர்ஸ் பெரும்பாலும் அனைத்து தமிழ் படங்களையும் இணையத்தில் வெளியிடுவதால் முன்னெச்சரிக்கையாக இணையத்தில் வெளியிட தடை கோரி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

உத்தரவு பிறப்பித்த பின்னரும், சீமராஜா படம் வெளியான முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ் அந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படத்தை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இணையதள லிங்க்கை நீக்கிவிட்டனர். அதேசமயம் அவர்களது மற்றொரு இணையதளமான தமிழ் கன் மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த இணையத்தில் ஆன் லைனில் இந்தப் படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts