முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

அந்தரத்தில் உயிருக்கு போராடிய 80 பேரை காப்பாற்றிய இளைஞன்! - tamil

Tags : 80 Lifes, JCB Driver, Kapil, கபில், ஜே.சி.பி., பேருந்து விபத்து, Category : TAMIL NEWS,

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 80 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழும் நிலையில் பேருந்து நின்றது.

முன்பக்க சக்கரம் அந்தரத்தில் தொங்கியபடி பேருந்து கவிழும் நிலையில் தத்தளித்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அப்பகுதியில் ஜே.சி.பி., மூலம் மண் அள்ளும் பணியில் கபில் என்ற இளைஞர் ஈடுபட்டிருந்தார்.

அவர் இயக்கி கொண்டிருந்த ஜே.சி.பி., வண்டியை பேருந்து இருந்த பகுதிக்கு கொண்டு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டார்.

துணிச்சலாக ஜே.சி.பி., மூலம பேருந்து கவிழாமல் தடுத்த கபில் பேருந்தில் தத்தளித்த பயணிகளை இறங்கும்படி தெரிவித்துள்ளார். பேருந்தில் இறங்கிய பயணிகள் கண்ணீருடன் கபிலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?