முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹெச்.ராஜா நேரில் ஆஜராக உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்!

Tags : BJP, H.Raja, Madras High Court, பாஜக, புதுக்கோட்டை, விநாயகர் சிலை, ஹெச்.ராஜா, Category : TAMIL NEWS,

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இந்த ஊர்வலம் செல்ல இருந்த பகுதியில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அப்பகுதி போலீசார் ஊர்வலத்தைத் தடுத்துள்ளனர்.

ஹெச். ராஜாவின் சர்ச்சைகளை பாஜக வேடிக்கை பார்ப்பது ஏன்?

இதையடுத்து, ஊர்வலத்தை தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் வீடியோவாக பரவியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது போலீசாரை அவதூறாக பேசியது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹெச்.ராஜா 4 வாரத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு புகாரை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், செல்வம் அமர்வு விசாரணைக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

H Raja: ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

#HRaja Court should be punished severely. He demolished common peoples respects for the Court and police this will… https://t.co/AOOrODMCZw— A.Vimal (@VimalRavishank1) 1537036481000


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts