கருணாநிதியைப் பற்றி பேசியது தவறு தான்! அமைச்சர் கடம்பூர் ராஜூ

கருணாநிதியைப் பற்றி பேசியது தவறு தான் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பேசுகையில், ‘கருணாநிதி முதல்வராக இருந்தபோது இறந்திருந்தால் எல்லா மரியாதையும் கிடைக்கும். ஆனால், அவர் பதவியில் இல்லாமல் இருந்த போது கூட அரசு மரியாதை கிடைத்திருக்கிறது என்றால், அது அதிமுக போட்ட பிச்சை’ என்று கடுமையாக பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், அமைச்சர் கடம்பூர் ராஜூ தரம் தாழ்ந்து விட்டதாக கடுமையாக சாடினார்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு பேசியதாவது: ஜெயலலிதாவின் நினைவிடம் குறித்து திமுகவினர் பேசியதால் தான், கருணாநிதியைப் பற்றி பேசினேனன். திமுகவினர் தான் தரம்தாழ்ந்த அரசியல் செய்வார்கள். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யாரும் விளங்கியதாக சரித்திரம் இல்லை. கருணாநிதியைப் பற்றி நான் பேசியது தவறு தான்’.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *