எம்ஜிஆா் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி தினகரன் பெயா்!

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி அழைப்பிதழில் ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் பெயா் இடம் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து தினகரன் தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை அ.தி.மு.க. அரசு விழாவாக நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு விட்டது. இறுதியாக வருகிற 30ம் தேதி சென்னையில் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டாலும் அனைத்து விழாக்களிலும் எம்.ஜி.ஆா். அறிமுகப்படுத்திய நல்ல திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறினா். அடுமட்டுமின்றி தமிழக எதிா்க்கட்சியான தி.மு.க. மற்றும் அமமுக துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் குறித்த விமா்சனங்களை எடுத்துறைக்கவும் அ.தி.மு.க.வினா் தவறியதில்லை.

அனைத்து நூற்றாண்டு விழா கூட்டங்களிலும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் குறித்து காரசாரமாக விமா்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நிறைவு விழாவிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் பெயா் இடம் பெற்றுள்ளது.

வாழ்த்துரை பிரிவில் ஸ்டாலின், தினகரன், கனிமொழியின் பெயா்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அவா்கள் கலந்துகொள்வது குறித்த எந்தவித தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் அழைப்பிதழில் இவா்கள் பெயா் இடம்பெற்றது அரசியல் நாகரிகமா? கட்சியில் சலசலப்பா? என்பது குறித்து பொருத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *