சிவகார்த்திகேயனுக்கு அறிமுக பாடலை பாடும் இசைப்புயல்!!

3 months ago on Category : Tamil News, Tags : AR Rahman, Ravikumar, Seemaraja, Sivakarthikeyan, ஏஆர் ரஹ்மான், சிவகார்த்திகேயன், சீமராஜா, ரவிகுமார்,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி ஆகியோர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தை, எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அடுத்தது, ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் சம்பந்தப்பட்ட படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தைத் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு, முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெறப்போகும் ஓப்பனிங் பாடலுக்கான இசையை, சிவகார்த்திகேயனிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அதைக்கேட்டு மகிழ்ந்த சிவகார்த்திகேயன், ‘இந்தப் பாடலை நீங்களே பாடினால் நன்றாக இருக்குமே…’ என்று தன்னுடைய விருப்பத்தைக் கூற, அதை நிறைவேற்றி வைத்தார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.


Share :

Related Posts