முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

திக்கற்று நின்ற எனக்கு நம்பிக்கையை ஊட்டியவர் தல அஜித்! - கணேஷ் வெங்கட்ராம்!

Tags : Ajith, Ajithkumar, Bigg Boss, Bigg Boss Tamil, Ganesh Venkatram, Thala, Category : TAMIL NEWS,

அன்று திக்கற்று நின்ற என் தோளில் கையைப் போட்டு எனக்கு நம்பிக்கையை தந்தவர் தல அஜித் என்று பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நடிகர் அஜித்தைப் பற்றி பலரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றும் சினிமா தொழிலாளர்களிடம் நடிகர் என்ற ஈகோ இல்லாமல் பழகுபவர் நடிகர் அஜித். மேலும் அவர்களில் ஒருவருக்கு கஷ்டம் என்று தெரிந்தவுடன் உடனே உதவி செய்பவர் அஜித்.

அந்த வகையில் அவருடன் இருந்து சில நேரங்கள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.

நான் சினிமாவில் நடிக்க வந்த சமயத்தில் இயக்குனர் பிரியதர்ஷனின் பிறந்தநாள் வந்தது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன். அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது என்னை யாருக்கும் தெரியாது என்று. மேலும் அவர்களுக்கும் என்னை தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் மன வேதனையுடன் நின்றிருந்தேன்.

அப்போது என் தோளில் ஒரு கை தென்பட்டது. அது தல அஜித்தின் கைதான். அப்போது அஜித் அவர்கள் என் தோளில் கைப்போட்டு, சினிமாவிற்கு வந்ததற்கு என் வாழ்த்துக்கள் என்றார். மேலும் என்னிடம் அவரின் வெற்றி தோல்விகளை பகிர்ந்து கொண்டார். அவரின் பணிவு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பெருந்தன்மை இதெல்லாம் பார்க்கும் போது அவரை எனக்கு நிறைய பிடிக்கும் என்றார் கணேஷ் வெங்கட்ராமன்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts