முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சென்னையில் தொடரும் மின்வெட்டு - பொதுமக்கள் புகார்

Tags : Chennai, Chennai Power Cut, Chennai Power Station, Power Cut In Chennai, Category : TAMIL NEWS,

சென்னையில் உள்ள பல முக்கிய பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் நிலவிய தொடர் மின்வெட்டு காரணமாக ஆட்சி மாற்றங்களே நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிலவிய பல மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு தமிழகத்தை மின்மிகை மாநிலமாக அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னை முழுவதும் பல மணி நேர தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கிண்டி, வேளச்சேரி ராஜ்பவன் பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளது.

மின்வெட்டு காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அலட்சியமான பதிலே மிஞ்சுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சென்னையில் மீண்டும் அறிவிக்கபடாத தொடர்மின்வெட்டு ஏற்படுகிறதா?என்கிற சந்தேகம் நிலவுகிறது.

மக்களின் அன்றாட வாழ்க்கையயை பாதிக்கும் இந்த மின்வெட்டு பிரச்சனைக்கு அரசும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts