முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

தமிழ்நாட்டில் ஹெல்மெட், சீட்பெல்ட் அபராத வசூல்? எவ்வளவு தெரியுமா ?

Tags : Chennai, Compulsory Helmet Law, Director General Police, Tamil Nadu Police, கட்டாய சீட்பெல்ட் சட்டம், கட்டாய ஹெல்மெட் சட்டம், சீட்பெல்ட் அபராதம் வசூல், தமிழக டிஜிபி, தமிழ்நாடு போலீஸ், ஹெல்மெட் அபராதம் வசூல், Category : TAMIL NEWS,

சென்னை: ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட அபராதத் தொகை குறித்து, உயர்நீதிமன்றத்தில் தமிழகப் போலீசார் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

மோட்டார் வாகனச் சட்டம் அமலாக்கம் குறித்து, சென்னையைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாய ஹெல்மெட் மற்றும் காரில் செல்வோர் கட்டாய சீட்பெல்ட் குறித்து போலீசார் ஏன் தீவிரம் காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழகப் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஹெல்மெட் அணிவது உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 2013ல் இருந்து கடந்த ஜூன் மாதம் வரை, ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரூ.13.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் தொடர்பான வழக்குகளில் இருந்து, ரூ.3.66 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிகள், கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rs 13.2 cr collected as fine between 2013 and July this yr for not wearing helmets says TN police.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts