முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சர்கார் இசை வெளியீட்டு விழா கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் சன் பிக்ஸர்ஸ்!

Tags : Actor Vijay, Sarkar, Sarkar Audio Launch, Sarkar Kondattam, ஏஆர் முருகதாஸ், சர்கார், சர்கார் ஆடியோ வெளியீடு, சர்கார் இசை வெளியீடு, நடிகர் விஜய், Category : TAMIL NEWS,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வெளிநாடுகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தின் இசை வெளியீடு விழா குறித்து புதிய அறிவிப்பு இன்று வெளியாகும் என சன் பிக்ஸர் டுவிட் செய்திருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

புதிய அறிவிப்பு:இன்று 6 மணிக்கு வெளியான சர்கார் இசை வெளியீடு குறித்த அறிவிப்பில், வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை தொடர்ந்து பாருங்கள். அதில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு விரைவாக அதிக கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஒருவர் எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். இதில் 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு வீடு தேடு இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் வரும். அவருக்கு விழாவுக்கு வந்து செல்ல விமான டிக்கெட், வழி செலவுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Here’s your chance to win an invitation to the #Sarkar Audio Launch along with a Two-Way Flight ticket to Chennai F… https://t.co/whv5S6KA1V— Sun Pictures (@sunpictures) 1537446733000


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts