முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

`சிறையில் உற்சாகமாக இருக்கிறார் சசிகலா!' - கருணாஸ் வைத்த முற்றுப்புள்ளி - tamil

Tags : Karunas, Sasikala, Sasikala Natarajan, கருணாஸ், சசிகலா, நடராஜன், Category : TAMIL NEWS,

சிறையில் சசிகலா மிகவும் உற்சாகமாக இருக்கிறார் என கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் கருணாஸ் நேற்று சசிகலாவை சிறையில் சந்தித்துப் நீண்ட நேரம் பேசினார்.
இதுகுறித்து கருணாஸிடம் கேட்ட பொழுது அவர் பேசியதாவது:

சிறையில் அவர் எப்படி இருக்கிறார் என்ற கேட்ட கேள்விக்கு, அவர் சிறையில் நலமாகவும், மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.
ஏன் சந்தித்தீர்கள் என்ற கேள்விக்கு, “அவரை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சசிகலா கணவர் நடராஜின் இறுதி அஞ்சலியின் போது சந்தித்தது. அதனால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.” என்றார்.

அரசியலுக்கான சந்திப்பா?அங்கு எந்த அரசியலும் பேசவில்லை. ஆனால் அவர் தமிழ் நாட்டு அரசியல் குறித்து நல்ல அப்டேட்டில் இருக்கிறார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்ட்டி குறித்து பேசினீர்களா? என்ற கேள்விக்கு, “இல்லை பொதுவான விஷங்களை மட்டும் பேசினோம். இடைத்தேர்தல் குறித்து பேசவில்லை.” என்றார்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts