முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

கேரளாவிற்கு ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்!!

Tags : ADMK MLAs, Edappadi Palanisamy, Kerala Flood Relief, Tamilnadu, Category : TAMIL NEWS,

அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ளப் பெருக்கிற்கு நிவாரணமாக வழங்கியுள்ளனர்.

கடந்த மாதம் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக, அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இவற்றில் சிக்கி, சுமார் 450க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.

இதையடுத்து, சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கேரளாவிற்கு உதவும் வகையில் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்தனர். இதுதவிர, பல லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.

மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், அமைச்சர் பெருமக்கள், பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்… https://t.co/QTHZFKQQCN— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) 1537171315000
இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேரளா வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்தனர். அந்த வகையில், சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில், அதிமுக அமைச்சர்கள் தங்கள் அனைவரது ஒருமாத சம்பளமான ரூ.1.13 கோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கினர்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts