முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

மாணவர்களை மசாஜ் செய்யவைத்து பள்ளியில் சீட்டுக்கட்டு விளையாடும் ஆசிரியர்கள்

Tags : Dindugul School, Government School Teachers, Teacher Misbehavior, ஆசிரியர்கள் தவறான வழிநடத்தல், திண்டுக்கல் அரசுப்பள்ளி, Category : TAMIL NEWS,

திண்டுக்கல்லில் இயங்கும் அரசு பள்ளி ஆசியர்கள் இருவர் மாணவர்களை தங்களுக்கு மசாஜ் செய்ய வைத்து வகுப்பையில் சீட்டு விளையாடும் சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடையகோட்டை அரசு பள்ளி ஆசியர்கள் இருவர், மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருவதற்கு பதிலாக பள்ளி வளாகத்தில் படுத்து தூங்குவதும், மாணவர்களை மசாஜ் செய்ய வைப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய அவர்கள், பள்ளி மாணவர்கள் முன்பு வகுப்பறையில் சீட்டுக்கட்டு விளையாடுவதாகும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மாணவர்களின் படிப்பு சீர்குலைந்து வருவதை அறிந்த பெற்றோர்கள், பள்ளி வளாகத்தில் முற்றுகையிட்டு ஆசியர்களை செயல்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் அவர்களை இடமாற்றம் செய்யச்சொல்லி கேட்டுள்ளனர்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஆசியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோர்கள் அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து முதல் கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?