திருமணம் செய்ய வற்புறுத்துவதாக ஆண் நண்பர் மீது நடிகை நிலானி புகார்!

காவலர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகை நிலானி தனது ஆண் நண்பர் ஒருவர் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகளவில் நடைபெற்ற போராட்டங்களில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடக்கூடாது என்று குரல பல தரப்பு மக்களிடம் ஓங்கி ஒலித்தது.

இதற்கு ஆதரவு தெரிவித்து பல சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்பட கலைஞர்களும் போராட்டங்களில் கலந்து கொண்டனர். அப்போது ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மூலம் கவனம் பெற்ற நபர் நிலானி.

சின்னத்திரை நடிகையான இவர், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் ஒரு தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறையினர் விமர்சித்து வீடியோ ஒன்று வெளியிட்டார்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை நிலானியை கைது செய்து சிறையில் அடைத்தது. அதை தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டதால், சிறையிலிருந்து வெளியே வந்து, தற்போது படப்பிடிப்புகளில் பங்கெடுத்து வருகிறார்.

இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலானி, தனது ஆண் நண்பரான காந்தி லலித்குமார் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதில், காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும், பணிபுரியும் இடத்திற்கு வந்து நேரடியாக தொந்தரவு செய்வதாகவும் நிலானி காவல் துறையில் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை காந்தி லலித்குமாரிடம் விசாரணை செய்தது. அப்போது அவர் இனி நிலானியை தொந்தரவு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினர்.

நிலானி புகார் அளித்த காந்தி லலித்குமார் சின்னத்திரை தொடரில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். மேலும் நிலானி திருமணத்தை மறுத்ததால் சென்னை கே.கே. நகரில் உள்ள சாலையில் அவர் தீக்குளித்ததாகவும், தற்போதுஅவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *