முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? 4வதும் பெண் என்று 7 மாத கருவை கலைத்த பெண் பலி!

Tags : Abortion, Madurai, Newborn Baby Girls, Seventh Month Of Pregnancy, Usilampatti, Category : TAMIL NEWS,

மதுரை மாவட்டத்தில் பெண் குழந்தை என்று தெரிந்து கருக்கலைக்க சென்ற 7 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் 4வது முறையாக ராமுத்தாய் கருத்தரித்திருந்தார். இந்தக் குழந்தையாவது ஆண் குழந்தையாக இருக்கும் என்ற ஆசையில் இருந்த ராமுத்தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4வதும் பெண் குழந்தை என்று தெரியவர, 7 மாத கர்ப்பிணியாக இருந்த ராமுத்தாய் கருவை கலைக்க முயற்சித்துள்ளார். இதற்காக மருத்துவமனைக்கு செல்லாமல், தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த செவிலியர் லட்சுமியிடம் சென்றுள்ளார்.

லட்சுமி, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். ஆனால், அவர் தன் வீட்டிலேயே வைத்து ராமுத்தாய்க்கு கருக்கலைப்பு சிகிச்சை அளித்துள்ளார். இந்த நிலையில், இன்று கருக்கலைப்புக்காக சென்றிருந்த ராமுத்தாய் சிகிச்சையின் போதே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, ராமுத்தாயின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செவிலியர் லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share :

பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் ?

Related Posts