வெளிநாட்டு பெண்ணை காதலிக்கும் ’அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா.??

வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. காதல் முறிவு ஏற்பட்ட இளைஞராக மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த விஜய் தேவரகொண்டா ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் மூலம் வெகுவான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

’அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டாவின் காதலி இவர்தான்..!!
இந்நிலையில், அவரும் வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா விம்மி என்ற வெளிநாட்டவரை காதலிப்பதாகவும்,

அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இருப்பினும், அந்த புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இருக்கும் பெண் யார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. தஎலுங்கு திரையுலகில் கோலோச்சி வரும் அவர், ஞானவேல்ராஜா தயாரிப்பில் தயாராகி வரும் நோட்டா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *