தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் விஷால்..!!

கமல்ஹாசனுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளார் நடிகர் விஷால். சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்கள் சினிமாவில் ஹீரோவானது அந்த காலம். ஆனால் தற்போது சினிமாவில் முன்னணி வரிசையில் உள்ள நடிகர்கள் அடுத்தடுத்து தொலைக்காட்சி உலகில் கால்பதித்து வருவது இந்த காலம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதற்கு பிறகு, பிரபல தமிழ் நடிகர்கள் பலர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆர்யா, ’மிர்ச்சி’ சிவா போன்றோர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மக்களிடம் வரவேற்பு பெற்றது.

அந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் விஷால் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் விதைச்சவன் “தூங்கலாம்…விதைகள் தூங்காது…அன்பை விதைப்போமா?” என்று விஷால் பேசியுள்ளார்.

A unique show hosted by @VishalKOfficial. Coming soon on @SunTV ! https://t.co/uWb1djXVoM— Sun TV (@SunTV) 1537271945000

இந்த வீடியோ விஷால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இது சமூகநலன் சார்ந்த ரியாலிட்டி ஷோவாக இருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியலிலும் கால்பதித்துள்ளார்.

மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கிவுள்ள விஷால், சமூக நலன் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *