முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சர்கார் பாடலை டவுன்லோட் செய்யுங்கள்!!

Tags : Sarkar, Sarkar Single Track, Simtaangaran, Sun Nxt, Thalapathy Vijay, சர்கார், சிம்டான்காரன், Category : KOLLYWOOD NEWS,

சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாக உள்ள நிலையில், அதை முன்கூட்டியே கேட்பதற்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நடிகர் விஜய், துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி வரும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் நாளை வெளியாக உள்ளது. சிம்டாங்காரன் என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Exclusive Premiere of #Sarkar First Single! Watch #SIMTAANGARAN one hour before the rest of the world only on Sun N… https://t.co/LLjSlRwcVo— Sun Pictures (@sunpictures) 1537715320000
இந்தப் பாடல் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், ‘சன் நெக்ஸ்ட்’ (SUN NXT) அப்பில் 5 மணிக்கே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்பை ரசிகர்கள் பிளே ஸ்டோரில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share :

பாமக அதிமுக பிஜேபி கூட்டணி ? மெகா கருத்துக்கணிப்பு
பாமக யாருடன் கூட்டணி வைக்க தொண்டர்கள் விரும்புகிறார்கள்?
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு...?

Related Posts