முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

சபரிமலை போராட்டத்தில் வன்முறை: அரசு பேருந்துகள் உடைப்பு- 20 பேர் காயம்

Tags : Category : TAMIL NEWS,

பத்தனம்திட்டா:உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால், அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு புறப்பட்டு வந்தனர். ஆனால், அவர்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது.சபரிமலை செல்லும் பாதைகளில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இந்த வன்முறை மற்றும் தடியடியில் 5 பக்தர்கள், 15 போலீசார் காயமடைந்ததாகவும், 10 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கேரள அமைச்சர் ஜெயராமன் கூறினார். இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்றும், போராட்டத்தின் பின்னணியில் அவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயராமன் குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். #SabarimalaProtests #SabarimalaVerdict #SabarimalaViolence

Related Tags :

சபரிமலை |
ஐயப்பன் கோவில் |
சுப்ரீம் கோர்ட் |
பெண் பக்தர்கள்


Share :