முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா? சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்!

Tags : A.R.MURUGADOSS INTERVIEW, SARKAR, SARKAR SONGS, SARKAR TEASER, SUN PICTURES, VIJAY, Category : KOLLYWOOD NEWS,

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள சர்கார் படத்தின் டீசர், நாளை (அக்டோபர் 19 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது.

இதையடுத்து, படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், படத்தின் டீசர் விஜயதசமி பண்டிகையான, அக்டோபர் 19 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தில் விஜய் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயரை இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார். விஜய் கதாபாத்திர பெயர் சுந்தர் ராமசாமி என அவர் தெரிவித்துள்ளார்.
தவிர, சர்கார் அரசியல் படம்தான், ஆனால் எந்த குறிப்பிட்ட கட்சியையும் தலைவர்களையும் கேலி பேசாமல், மக்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை கொண்ட அரசியல் படம் என்றார்.

சர்கார் படத்தில் நடிக்க நடிகர் விஜய் முதலில் தயக்கம் காட்டினார். பின் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டார். என முருகதாஸ் தெரிவித்துள்ளார்.


Share :

Related Posts